2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை அடங்கிய சுற்றறிக்கையை வெளியிட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு!

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பிரதான பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் அடங்கிய சுற்றறிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2027 ஆம் ஆண்டில் அரச விடுமுறை நாட்கள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்திற் கொண்டு அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களை 197 நாட்களுக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாம் தவணை 2027 ஜனவரி 4 திங்கட்கிழமை முதல் 2027 ஏப்ரல் 09 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.

இரண்டாம் தவணை 2027 ஏப்ரல் 26 திங்கட்கிழமை முதல் 2027 ஜூலை 30 வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாம் தவணை 2027 ஒகஸ்ட் 30 திங்கட்கிழமை முதல் 2027 டிசம்பர் 03 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை:

முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒகஸ்ட் மாதத்திலும், சாதாரண தரப் பரீட்சை – 2027 டிசம்பர் மாதத்திலும் நடைபெறவுள்ளன

விசேட காரணங்களுக்காக ஏதேனும் ஒரு பாடசாலை நாள் மூடப்பட நேரிட்டால், அதற்குப் பதிலாக மாற்று வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects