எல்-நினோ காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நீரைச் சேமித்துக்கொள்வதற்காக, “Clean Sri lanka” செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் ‘யூனிலீவர் தியவர சஹய’ வேலைத்திட்டத்தினால் வழங்கப்படும் நீர்த்தொட்டிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அடையாள ரீதியாக கையளிக்கும் நிகழ்வு 25.08.2026 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் முதலாம் கட்டத்தின் கீழ் 200 நீர்த்தொட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளதுடன், மொனராகலை, பொலன்னறுவை, காலி, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நாளை (26) முதல் குறித்த நீர்த்தொட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இந்த நீர்த் தொட்டிகள், யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் சமகால தயாரிப்பு மற்றும் ஏற்றுமதிப் பிரிவுத் தலைவர் ஹேஷான் சாலிந்த பிரண்டியகம்பலவினால் அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் (க்ளீன் ஸ்ரீலங்கா), எஸ்.பி.சி.சுகீஸ்வர, அதன் மேலதிக பணிப்பாளர் நாயகம் கபில செனரத் ஆகியோருடன், யுனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திலின ரொட்ரிகோ, கௌஷிகா வர்ணசூரிய, கசுன் விஜேவிக்ரம உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










