கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுக்கான மீள் திருத்த விண்ணப்பம் கோரல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அண்மையில் வௌியான 2025 (2026) கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறு​பேறுகள் தொடர்பான மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்கள் 25.06.2026 அன்று முதல் கோரப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீள் பரிசீலனைக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரையில் பரீட்சார்த்திகள் இணையவழியூடாக மாத்திரம் விண்ணப்பிக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

பாடசாலை மற்றும் தனிப்பட்ட ஆகிய இரண்டு பரீட்சார்த்திகளுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறைமை உள்ளிட்ட மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பில் மூன்று மொழிகளின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects