Rotary Club of Batticaloa Heritage மற்றும் Rotary Colombo Port City ஆகியனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய இலவச கண்புரை சத்திரசிகிச்சை நிகழ்வு 03 – 05 – 2024 அன்று நடைபெற்றது.
Rotary Club of Batticaloa Heritage இன் தலைவர் கி.கௌரீஸ்வரனின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சுமார் 50 பேருக்கு இலவச கண்புரை சத்திர சிகிச்சை வழங்கப்பட்டடன.
இச்சிகிச்சைகளுக்கான செயற்கை கண்ணக வில்லைகள் உட்பட மருத்துவ உதவிகள் Rotary Colombo Port City ஐச் சேர்ந்த திரு. திருமதி. மகிழ்னன் ரடராஜாவினால் வழங்கப்பட்டதுடன் ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொண்டனர்.
மொத்தமாக 200 பேருக்கு இவ்வாறான கண்புரை சத்திர சிகிச்சைகள் இலவசமாக செய்யப்பட இருப்பதாகவும், அதில் முதற்கட்டமாக 50 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கௌரீஸ்வரன் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇