ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் ஊடான அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் – கொழும்பு முதலாவது நேரடி விமான சேவை ஆரம்பம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கி ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் 25.08.2026 அன்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்டதை முன்னிட்டு, விமான நிலையத்தில் குறித்த விமானத்திற்கு விசேட நீர் பீச்சி வரவேற்பு (Water Salute) அளிக்கப்பட்டது.

Boeing 787 Dreamliner ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம், 25.08.2026 அன்று இரவு 6.24 மணியளவில் Jetstar நிறுவனத்தின் JQ-005 விமானமாக மெல்பேர்னில் இருந்து 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெட்ஸ்டாரின் இந்த விமான சேவை இனிமேல் வாரத்திற்கு மூன்று நாட்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மெல்பேர்ன் மற்றும் கட்டுநாயக்க இடையே இயக்கப்படவுள்ளது.

மெல்பேர்னிலிருந்து இலங்கைக்கான இந்த விமானப் பயணத்திற்கு சுமார் 10 மணி நேரம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையே குறைந்த கட்டண (Low Fares) விமான சேவையை வழங்கும் நோக்கில் இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜெட்ஸ்டாரின் முதலாவது விமானத்தை வரவேற்கும் நிகழ்வு கட்டுநாயக்க விமான நிலையத்தின் “சில்க் ரூட்” (Silk Route) பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.

ஜெட்ஸ்டாரின் புதிய சேவை மூலம் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான விமானப் போக்குவரத்து தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வர்த் (Matthew Duckworth), இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects