சந்தை மூலதனத்தின் படி கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய நிறுவனமான எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்தின் பங்குகளை கொழும்பு பங்குச் சந்தையின் உத்தியோகபூர்வ பட்டியலிலிருந்து நீக்கத் தீர்மானித்துள்ளது.
எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் மிகப் பெரிய பங்குதாரரான ஜப்பானின் SG HOLDINGS GLOBAL PTE.LTD விடுத்த கோரிக்கைக்கு இணங்க நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
எக்ஸ்போ லங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் 82.43% பங்கு மூலதனத்தை SG HOLDINGS GLOBAL PTE.LTD கொண்டுள்ளது.
சந்தை மூலதனத்தின் படி, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 12 பெரிய நிறுவனங்கள் வருமாறு…..
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇