நேபாளத்தில் உள்ள இலங்கையர்களின் தகவல்களை அறிய அறிமுகமாகியுள்ள தொலைபேசி இலக்கம்!

நேபாள மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் திடீரென ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அந்தப் பகுதிகளில் வசிக்கும் அல்லது பயணம் மேற்கொண்டிருக்கும் ஏதேனும் இலங்கையர் குறித்த தகவல்கள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு வழிகளினூடாக அமைச்சினைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

உரிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும், பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அமைச்சு தொடர்ச்சியாகச் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துஷார ரொட்ரிகோ (பொது இராஜதந்திரப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஊடகப் பேச்சாளர்)

கையடக்கத் தொலைபேசி / வட்ஸ்அப் (WhatsApp): 070 7887778

தொலைபேசி இலக்கம்: 0112 473899

மின்னஞ்சல் (Email): publicity@mfa.gov.lk

தற்போது கிடைக்கப்பெறும் அதிகளவான அழைப்புகளைக் கருத்திற் கொண்டு, மிகவும் துரிதமானதும் துல்லியமானதுமான தொடர்பாடலுக்காக வட்ஸ்அப் ஊடாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் பரிமாறிக் கொள்ளுமாறும் அமைச்சு மேலும் கேட்டுக்கொள்கிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects