மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட புதிய ஆணையாளர் நாயகம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஆணையாளர் நாயகம் இன்று (01.09.2026) முற்பகல் கொழும்பு 05, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் தனது உத்தியோகபூர்வ கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பு, ஹுனுபிட்டிய கங்காராம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாய்மி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் சமய வழிபாடுகளுக்கு மத்தியில் புதிய ஆணையாளர் நாயகம் தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects