ஆகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2026 ஆகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சிறிய அளவிலான வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அதன் பிரகாரம் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் 191,704 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், இது கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 3.3% வீழ்ச்சியாகும்.தீவுகளை சுற்றிப்பார்த்தல்

ஆகஸ்ட் மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்ப்டுகிறது.

அதன் அடிப்படையில் அதன் எண்ணிக்கையாக 47,253 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் இதற்கு மேலதிகமாக பிரித்தானியாவிலிருந்து 19,588 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 12,321 சுற்றுலாப் பயணிகளும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 11,405 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,535,122 ஆகப் பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects