காது கேளாதோர், பேச முடியாதோர் மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், 119 பொலிஸ் அவசர அழைப்பு சேவைக்காக பிரெயில் அடிப்படையிலான சேவை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸின் 160 ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 04.09.2026 அன்று இந்த புதிய சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் முதலாவது பிரெயில் அடிப்படையிலான பொலிஸ் அவசர சேவை இதுவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









