நாட்டிலுள்ள விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்க விடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் மீண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
விமான நிலையங்களுக்கு அருகில் பறக்க விடப்படும் பட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை வான்படை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக விமான விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை வான் படை எச்சரிக்கிறது.
இதேவேளை, விமான நிலையங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு காரணங்களுக்காக, சர்வதேச விமான நிலையங்களுக்கு அருகில் பட்டங்களை பறக்க விடுவதற்கு தடை விதிப்பதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










