வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான அறிவித்தல்!

நிலவும் வறட்சியான காலறிலை காரணமாக பல மாவட்டங்களில் ஏற்பட்டள்ள பயிர் சேதங்களுக்கு இன்று (04.09.2026) முதல் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை  தெரிவித்துள்ளது.

அதன்படி பொலனறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் உரிய வங்கி கணக்குகளில் இன்றையதினம் இழப்பீட்டு தொகை வைக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இம் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வறட்சியான காரநிலையின் காரணமாக அம்பாந்தோட்டை அம்பாறை புத்தளம் அநுராதபுரம் பொலனறுவை மற்றும் மொனராகலை உள்ளிட்ட மாவட்டங்களில் நெல் சோளம் உள்ளிட்ட பல பயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. 

பயிர்ச் சேதங்கள் தொடர்பில் விவசாயிகள் அறிவித்ததன் பின்னர், அதிகாரிகள் துரிதமாக சம்பந்தப்பட்ட விவசாய நிலங்களுக்குச் சென்று சேதங்களைப் பரிசோதித்து, பாதிக்கப்பட்ட பயிர் நிலங்களின் அளவை மதிப்பீடு செய்த பின்னர் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டை வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்கனவே சுமார் 3,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, சேதமடைந்த நெல், சோளம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோயா மற்றும் மிளகாய் ஆகிய 6 பயிர்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

மேலும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கர் வரையான பயிர் நிலத்துக்கே இழப்பீடு வழங்கப்படும் எனவும் விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects