இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸிடமிருந்து கிடைத்த நிதியுதவி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கையில் அண்மையில் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மறுசீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்காக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் 100,000 அமெரிக்க டொலரை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இந்த நிதியுதவியை இலங்கையிலுள்ள பிலிப்பைன்ஸ் தூதுவர் நினா பி. கெய்ங்லெட் (Nina P. Cainglet), இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் தருணத்தில், பிலிப்பைன்ஸ் அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கும், காட்டிய ஒற்றுமைக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிதியுதவியானது சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கும், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சிகளுக்கும் பெரும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects