5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டு 5 ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையின் மேன்முறையீட்டு விடைத்தாள் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 07.09.2026 அன்று முதல் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, 07.09.2026 அன்று முதல் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இது முழுமையாக ஒன்லைன் முறைமையினூடாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சார்த்தி கல்வி கற்கும் பாடசாலையின் அதிபரால், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் (Username) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி [https://onlineexams.gov.lk] என்ற இணையத்தளத்திலுள்ள SCHOOL LOGIN பகுதிக்குள் பிரவேசித்து இந்த மேன்முறையீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects