இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது தூதுவர் வெய் ஹுவாசியாங்கிற்கு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அன்பான வரவேற்பை வழங்கியதுடன், இரு தரப்பினருக்கும் இடையில் சுமுகமான மற்றும் நட்புறவுடனான கலந்துரையாடல் இடம்பெற்றதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பின்னணியில், இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான உயர்மட்ட சந்திப்புகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects