நாட்டுக்கு 03 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09.09.2026) கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பில் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் இந்த விஜயம், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் பிற முக்கியத் துறைசார் ஒத்துழைப்புகளை மேலும் ஆழமாக்கும் நோக்கில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







