உயர்தர மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் புலமைப்பரிசில்கள் வழங்கும் திட்டத்தின் பாடசாலைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது நாளையுடன் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விப்பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய பணிப்புரைக்கு அமைவாக கடந்த வருடமும் இந்தவருடமும் கல்விப் பொதுத் தராதரப் சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
நாட்டின் 100 கல்வி வலயங்களையும் உள்ளடக்கும் வகையில், ஒவ்வொரு வலயத்திலிருந்தும் 50 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, 5000 மாணவர்களுக்கு மாதாந்தம் 6000 ரூபாய் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு முதல் முறையாகத் தோற்றி, பரீட்சையில் சித்தி பெற்று, உயர்தரம் கற்கத் தகுதிபெற்று, அரச பாடசாலையிலோ அல்லது கட்டணம் அறவிடாத தனியார் பாடசாலையிலோ கல்வி கற்றல் போன்றவை குறித்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படைத் தகுதிகளாக கருதப்படுகின்றன.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர… 👇👇