இம்முறை சிறுபோகத்தில் பயிர்ச்செய்கை பாதிப்பை எதிர்நோக்கிய 53,965 விவசாயிகளுக்கு இழப்பீட்டை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வறட்சியான வானிலையினால் இம்முறை சிறுபோகத்தில் 58,770 ஏக்கர் நெல் மற்றும் ஏனைய போகப்பயிர்கள் அழிவடைந்தன. இதன்காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக விவசாய அமைச்சர் அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைத்திருந்தார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇