வௌிநாட்டு தொழிலாளர்களினால் ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் – இலங்கை மத்திய வங்கி

வௌிநாட்டு தொழிலாளர்களினால் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் அறிக்கையொன்றில், இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது வளர்ச்சியைக் காட்டுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்திருந்தது.

இதற்கிடையில், ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரை வெளிநாட்டில் வசிக்கும் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்குக் கிடைத்துள்ள மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 6,131 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மத்திய வங்கியின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் கடந்த ஆண்டின் அக் காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஒரு வளர்ச்சியாகும். கடந்த 2025 இன் முதல் 8 மாதங்களுக்குக் கிடைத்த மொத்தப் பணப் பரிமாற்றத் தொகை 5,116 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects