புகையிரத சேவையைத் திறமையான மற்றும் தரமான சேவையாக மாற்றுவதற்கான மனித மற்றும் பௌதீக வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், என்ஜின் சாரதி உதவியாளர் தரம் III பதவிக்கு நியமிக்கப்பட்ட 100 பேருக்கு 14.09.2026 அன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.
புகையிரதத் துறையின் சேவைகளைத் தொடர்ச்சியாகவும் முறையாகவும் பராமரிக்கும் பொருட்டு, இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு பதவிகளுக்கு சுமார் 1,500 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 2027 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் புகையிரத நிலைய அதிபர்கள், புகையிரதக் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் உள்ளிட்ட வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடாத்தப் புகையிரதத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









