மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதில் தலைவர் நியமனம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி, மாயாதுன்ன ஸ்ரீ மெவன் அந்தனி எதிரிமாண்ணசூரிய கொறயா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராகக் கடமையாற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நலீன் ரொஹாந்த அபேசூரிய, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை வெளிநாடு செல்லவுள்ளதால், குறித்த பதவியில் பதில் கடமையாற்றுவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாயாதுன்ன கொறயா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் 21.06.2026 அன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects