இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த அமெரிக்க பசுபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியான அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயா வைஸ்மாஷல் சம்பத் துயகொன்தவை 19.02.2026 அன்று நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை பலப்படுத்துகின்ற வெளிப்படையான பங்காண்மையினை மீள வலியுறுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு உதவி செய்வதற்காக கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல் என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

எமது வாண்மைத்துவ படைகளுக்கிடையிலான பிணைப்புகளை பலப்படுத்துதல். நாடு கடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக ஒருவரோடொருவர் தொடர்புகொண்டு ஒன்றிணைந்து இயங்கும் தன்மையினை மேம்படுத்துதல் மற்றும் ஒரு பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்கான நீண்டகால உறுதிப்பாடு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் போன்றன இந்த சந்திப்பின் எதிர்பார்ப்பதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects