இலங்கையின் தொழிற்கல்வித்துறையை நவீனமயமாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல்!


இலங்கையின் தொழிற்கல்வித்துறையை நவீனமயமாக்குவதுடன், தொழிற்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகேவுக்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் பாராளுமன்ற அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

‘Asian Logistic’ நிறுவனத்தின் தலைவர் சனில் பெர்னாண்டோவின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இச்சந்திப்பில் இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் தொழிற்கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு நவீன மற்றும் நடைமுறைத் திறன்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பயிற்சிச் சூழலை உருவாக்குவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, நாட்டில் உள்ள தொழிற்கல்வி நிறுவனங்களின் வகுப்பறைகளை நவீனமயமாக்குவதுடன், மாணவர்களின் பயிற்சிகளுக்குத் தேவையான நவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நிவாரண அடிப்படையில் வழங்குவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக வெளிநாட்டு பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

மேற்படி உதவித் திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தனது தனிப்பட்ட செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் செயற்பட்டு வரும் சில தொழிற்கல்வி நிறுவனங்களை நேரடியாகப் பார்வையிடுவதற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவினர் தமது விருப்பத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects