கொழும்பில் நாளை முதல் சேவையில் ஈடுபடவுள்ள 104 மெட்ரோ பேருந்துகள்!

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, மிகவும் வசதியான மற்றும் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கத்துடன், மேல் மாகாணத்தில் உள்ள 7 மார்க்கங்களின் ஊடாக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 104 மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

ஜனாதிபதியின் தலைமையில் இந்த புதிய பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

நாளை (29.09.2026) முதல் குறித்த சேவைகளை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ பேருந்து (Metro Bus) தலைவர் எஸ்.எம்.யூ.பி. திலகவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பேருந்துகள் கொழும்பை மையமாகக் கொண்ட 7 மார்க்கங்களின் ஊடாக இயக்கப்படுவதுடன், பயணிகள் உரிய மார்க்கங்கள் மற்றும் நேரங்களுக்கு ஏற்ப தமது இலக்குகளை சென்றடையும் வகையில் சேவைகள் செயற்படுத்தப்படவுள்ளன.

“பொதுமக்கள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் தமது இலக்குகளை சென்றடைவதற்கு உதவுவதற்காகவே நாம் இந்த பேருந்து சேவையை அறிமுகப்படுத்துகிறோம்,” என திலகவர்தன குறிப்பிடுகிறார்.

புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, கொழும்புக்குள் நுழையும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும், குறிப்பாக ஒரே ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய காலகட்டத்தில் பலர் அலுவலகங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் சொந்த வாகனங்களைப் பயன்படுத்துவதாகவும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரு வாகனத்தில் ஒரு நபர் மட்டுமே பயணம் செய்வதாகவும், அதன் விளைவாக நாளாந்தப் போக்குவரத்திற்கு பெருமளவிலான வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் திலகவர்தன சுட்டிக்காட்டினார்.

இந்தப் பேருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

நாளாந்தப் போக்குவரத்திற்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவதற்குப் பொதுமக்களை ஊக்குவிப்பதன் மூலம் கொழும்பில் நிலவும் வாகன நெரிசலுக்குத் தீர்வு காண முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects