தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 194 அதிகாரிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு (NYSC) புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 194 அதிகாரிகளுக்கான பணி நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 28.09.2026 அன்று இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது மன்றத்தின் உள்ளக அதிகாரிகளுக்கான 35 பதவி உயர்வுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

குறிப்பாக ஆரம்ப சேவைப் பிரிவு (Primary Service Category), மேலாண்மை உதவி 1-1, மேலாண்மை உதவி 2-1, மேலாண்மை உதவி 1-1 உதவி இளைஞர் சேவை அதிகாரி / மேலாண்மை உதவி 4, இளநிலை மேலாண்மை சேவை, மற்றும் மேலாண்மை மற்றும் சிரேஷ்ட மேலாண்மை சேவை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, மன்றத்தின் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தகுதிபெற்ற 35 அதிகாரிகளுக்கு உள்ளகப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects