இலங்கைக்கான புதிய சீனத் தூதுவருக்கும், சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங்கும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று 29.09.2026 அன்று ஊடக அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு நட்புறவு மற்றும் ஒத்துழைப்புகள் குறித்தும் அமைச்சர் தனது விசேட பாராட்டைச் சீனத் தூதுவருக்குத் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில், இலங்கையின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காகச் சீன அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் தாராளமான பங்களிப்புக்கும் ஆதரவிற்கும் அமைச்சர் தூதுவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும், சீன அரசாங்கத்தின் நன்கொடையாகக் கட்டியெழுப்பப்பட்ட பொலன்னறுவை தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையில் அண்மையில் இடம்பெற்ற திடீர் விபத்துச் சம்பவம் தொடர்பாகவும் இரு தரப்பினருக்கும் இடையே விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

வெய் ஹுவாசியாங் இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பதவியேற்றதன் பின்னர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரைச் சந்தித்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந் நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (பொறியியல் சேவைகள்) சாலிந்த பண்டார உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் சீனத் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects