மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் 29.09.2026 அன்று மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் மக்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல தொடர்பாக இதன் போது பரவலாக கலந்துரையாடப்பட்டதுடன், இப்பிரச்சினைகளின் பின்னணியில் செயல்படுத்தப்படும் இனவாத சூழ்ச்சிகள் மற்றும் முயற்சிகளை முழுமையாக தோற்கடித்து சகல இன மக்களின் உரிமைகளையும் பாதுகாத்து மற்றும் நிரந்தரமான தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் பிரதான பிரச்சினையான மயிலத்தமடு மேய்ச்சல் பிரதேசத்தில் பால் பண்ணையாளர்களிடையே புற்தரைப் பிரச்சினை தொடர்பாக இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
பாரம்பரிய பண்ணை காலத்திற்கு பால் பண்ணையாளர்களின் மாடுகளை அப் பிரதேசத்திற்கு அனுப்புவதற்கும், அம்பாறை மாவட்டத்தில் இருந்து வருகை தருபவர்களுக்கு மேலதிகமாக, மாவட்டத்தில் சட்டரீதியாக அல்லாத அனுமதிப் பத்திரம் இன்றியும் மேற்கொள்ளப்படும் மணல், கிரவல் அகழ்வு காரணமாக சூழலுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அதிக அவதானம் செலுத்தப்பட்டது. பொலிஸ் மற்றும் புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வாராய்ச்சி பணியகத்தின் ஒத்துழைப்பு மற்றும் முறையான ஒழுங்கு விதிகளின் கீழ் அவ்வாறான சட்டவிரோத அகழ்வுகளை தடுப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எந்த விதத்திலும் சட்டவிரோதமாக அனுமதி பத்திரம் இல்லாமல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக இடம் அளிக்கப்பட மாட்டாது என அவர் வலியுறுத்தினார்.
மாவட்டத்தில் வனப் பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாகவும் இதன் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
கிழக்கு மாகாணத்திற்கு பகிர்ந்தளிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் மிகக் குறைந்த அளவிலேயே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளமை போதுமானது அல்ல என சுட்டிக்காட்டிய அமைச்சர், அமைச்சு மட்டத்தில் மற்றும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடி அக் குறைபாடுகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()










