செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கத்தில் மாற்றமில்லை – தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையிலான செப்டம்பர் மாதத்துக்கான பணவீக்கத் தரவுகளைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று (30.09.2026) வெளியிட்டுள்ளது. 

இதன்படி, கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் ஆண்டுக்கு ஆண்டு (Point-to-Point) அடிப்படையிலான முதன்மை பணவீக்க விகிதம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 8.0 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்திலும் எந்தவித மாற்றமுமின்றி 8 சதவீதமாகவே தொடர்ந்து நீடிக்கிறது. 

இருப்பினும், உணவுப் பிரிவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 8.5 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் 8.7 சதவீதமாகச் சற்று அதிகரித்துள்ளது. 

அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 7.7 சதவீதம் என்ற அளவிலேயே செப்டம்பர் மாதத்திலும் மாற்றம் இன்றிப் பதிவாகியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects