15ஆம் திகதி முதல் ஆர்ப்பமாகும் ராமர் பால மணல் திட்டுக்கான சுற்றுலா படகு சேவை!

உலக சுற்றுலா தின விழாவையொட்டி, மன்னார் மாவட்டத்தின் தலைமன்னாரிலிருந்து ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளையும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும், அதற்கான சோதனை ஓட்ட (வெள்ளோட்ட) நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பொதுமக்கள் இக்கடற் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்டச் செயலகத்தில் அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் 01.09.2026 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்கள், தலைமன்னார் பங்குத்தந்தை மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாகச் சுற்றுலாப் பயணிகளுக்கான படகுப் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும். இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன.

பயணிகள் எண்ணிக்கை: ஒரு படகில் 7 சுற்றுலாப் பயணிகள் வரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தால் ஒரு பயணிக்கு ரூ. 140 வீதம் கட்டணம் அறவிடப்படும்.

படகு உரிமையாளர்களால் ஒரு பயணிக்கு ரூ. 2,500 வீதம், ஒரு படகிற்கு (7 பயணிகள்) மொத்தம் ரூ. 17,500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ள ரூ. 17,500 கட்டணத்தின் மூலம் இலங்கைக்குச் சொந்தமான 5 மணல் தீவுகள் வரை சென்று பார்வையிட முடியும்.

பயணிகள் முதலாவது மணல் தீவுக்குச் சென்று நீச்சல் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான கூடுதல் கட்டணங்கள் மேலாண்மைக் குழுவால் விரைவில் அறிவிக்கப்படும்.

மூன்றாவது மணல் தீவில் இறங்கி, குறிப்பிட்ட நேரம் தங்கியிருந்து பார்வையிடவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இப் படகு சேவையைப் பயன்படுத்த விரும்பும் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா மேலாண்மைக் குழுவைத் தொடர்புகொண்டு தங்களுக்கான பயண ஏற்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects