மட்டக்களப்பில் 152 ஆவது உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி!

152 ஆவது உலக அஞ்சல் தினத்தினை முன்னிட்டு இலங்கை தபால் திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நவீன மற்றும் அத்தியாவசிய சேவைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுப் பேரணி ஒன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிரதான அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது மட்டக்களப்பு அஞ்சல்மா அதிபதி றுவன் சத்குமார தலைமையிலும் வழிகாட்டலிலும் பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகர் கிருபாழினி அருள்செல்வனின் ஏற்பாட்டிலும் இடம்பெற்ற நிகழ்விற்கு கிழக்கு மாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் எஸ்.பிரகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மட்டக்களப்பிலுள்ள 21 தபாலகங்களில் கடமையாற்றும் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள்
பேரணியில் பங்கேற்றதுடன், தபால் திணைக்களத்தின் பல்வேறு சேவைகளை விளக்கும் பதாகைகளை ஏந்தியவாறு பிரதான தபாலகத்தில் இருந்து மட்டக்களப்பு நகர் வரை சென்று தபால் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் முக்கிய சேவைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects