ஒக்டோபர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 4,365 ரூபாவிற்கு தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேவேளை, 5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 1,750 ரூபாவிற்கும், 2.3 கிலோகிராம் எடையுடைய சிலிண்டர் 815 ரூபாவிற்கும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒக்டோபர் மாதத்திலும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் தற்போதைய விலைகளே நடைமுறையில் இருக்கும்.
தற்போதைய லிட்ரோ எரிவாயு விலைகள்
12.5 கிலோகிராம் சிலிண்டர் – ரூ. 4,365
5 கிலோகிராம் சிலிண்டர் – ரூ. 1,750
2.3 கிலோகிராம் சிலிண்டர் – ரூ. 815 விற்பனை செய்யப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








