ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, மேல்நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க மற்றும் மேல்நீதிமன்ற நீதிபதி எச். எம். ஆர். எம். திலகரத்ன ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (06.10.2026) முற்பகல் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
தற்போது வெற்றிடமாக உள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி பதவிகள் இரண்டுக்காக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் கலந்துகொண்டார்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







