11வது கினாமி மிஷிடகா நினைவு தடகளப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இலங்கையின் காலிங்க குமாரகே தங்கப் பதக்கம் வென்றார்.
போட்டியை நிறைவு செய்ய காலிங்க குமாரகே 45.92 வினாடிகளை எடுத்துள்ளார்.
இதேவேளை, பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்ட நதிஷா ராமநாயக்க நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அவர் போட்டியை முடிக்க எடுத்துக்கொண்ட நேரம் 54.02 வினாடிகள் ஆகும்.
இதேவேளை, பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவிருந்த தருஷி கருணாரத்ன சுகவீனம் காரணமாக போட்டியில் பங்கேற்கவில்லை.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇