மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் IRDCRP திட்டத்தின் ஊடாக, மாவட்டத்தின் கிராமிய-நகர (Rurban) அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றத்திற்கேற்ற உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

‘ஒருங்கிணைந்த கிராமிய-நகர அபிவிருத்தி மற்றும் காலநிலை மீள்திறன் திட்டம்’ (Integrated Rurban Development & Climate Resilience Project – IRDCRP) என்பதன் கீழ், மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் குறித்து இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன் போது மாவட்டத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் நீர்வளங்களை மேம்படுத்துதல் நீரைச் சிக்கனமான முறையில் பயன்படுத்துதல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப கிராமியப் பகுதிகளின் மீள்திறனை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறிய குளங்களைப் புனரமைத்தல் நீர்ப்பாசனக் கால்வாய்களை மேம்படுத்துதல், சிறிய வீதிகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண நீர்பாசன பணிப்பாளர் வி.ராஜகோபால், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநிதன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ரீ.நிர்மலராஜ், கமநல சேவைகள் நிலைய பிரதி ஆணையாளர் எஸ்.யோகராஜா, பொறியியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects