இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்தின் கடலோர வள மேலாண்மை கல்வித் திட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்று, தென்கொரியாவின் கொரியா கடல்சார் மற்றும் கடலியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும் விசேட மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்று, சர்வதேச அளவிலான கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவங்களைப் பெறும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ், தென்கொரியாவின் புகழ்பெற்ற பேராசிரியரான லிம் நேரடி வழிகாட்டுதலின் கீழ், நவீன கடல்சார் மற்றும் கடல் வள மேலாண்மைத் துறைகள் சார்ந்த நடைமுறை மற்றும் தத்துவார்த்த அறிவையும், அதிநவீன தொழில்நுட்பப் பயிற்சிகளையும் பெற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பு இலங்கை மாணவர்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்த சிறப்பான மாணவர் பரிமாற்றத் திட்டமானது, இலங்கை கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும் கொரியா கடல்சார் மற்றும் கடலியல் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான நீண்டகால கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச அளவிலான அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்சார் திறன்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு முக்கிய வழியையும் வழிவகுத்துள்ளது.
மேலும், இலங்கையின் நீலப் பொருளாதாரம் மற்றும் கடல்சார் துறையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான தகுதியான மனித வளங்களை உருவாக்குவதில் இத்தகைய சர்வதேச கூட்டாண்மைகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கவுள்ளன.
இத்தகைய சிறப்புமிக்க திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய பேராசிரியர் லிம் அவர்களுக்கும், கொரியா கடல்சார் மற்றும் கடலியல் பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை கடல்சார் பல்கலைக்கழகம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










