Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்த மற்றுமொரு நிதி நன்கொடை!

டித்வா சூறாவளி Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்த மற்றுமொரு நிதி நன்கொடையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்திற்குள்ளான நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு கல்வி கூட்டுறவுச் சங்க பணியாளர்களின் ஒரு நாள் சம்பளமான ஒரு மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக வழங்கப்பட்டது.

இதற்கமைய, கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எம். ஜி. பி. எல். லால் குமாரவினால் இதற்கான காசோலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவிடம் 09.10.2026 அன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் தொழில் பிரதி அமைச்சரும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளருமான மஹிந்த ஜயசிங்க, கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் கிரிஷாந்த கவிகார, உப செயலாளர் சங்கீத் கயான் எதிரிசிங்க உள்ளிட்ட கல்வி கூட்டுறவுச் சங்கத்தின் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects