Clean Sri Lank – Clean Colombo திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் சந்திப்பு !

‘Clean Sri Lanka’ – ‘Clean Colombo’ திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயும் சந்திப்பு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (09.10.2026) முற்பகல் நடைபெற்றது.

மலசல கட்டமைப்பு மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களைப் புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல், சூழலை அழகுபடுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் இதன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் தொடர்பாக இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

கொழும்பு மாநகர சபை, இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியன மேற்படி திட்டத்துடன் தொடர்புடைய பிரதான நிறுவனங்களாகும். இந் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் சமூக நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் ஒழுக்கவிழுமிய மறுமலர்ச்சிக்காக பிரஜைகளின் நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சிகளை, கொழும்புக்குரிய திட்டங்களுடன் ‘Clean Colombo’ திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்க வேண்டிய அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலதிக செயலாளர் (Clean Sri Lanka) எஸ்.பி.சி. சுஜீஸ்வர உள்ளிட்ட ‘Clean Sri Lanka’ செயலகத்தின் பிரதிநிதிகள், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஹேமந்த வீரக்கோன் உள்ளிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதிநிதிகள், முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிநிதிகள், இலங்கை கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதிநிதிகள், இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects