மட்டக்களப்பு நாவற்காடு தபால் அலுவலகத்திற்கான புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 12.10.2026 அன்று நடைபெற்றது.
கிழக்கு மாகாணப் பிரதி அஞ்சல் மா அதிபர் எஸ்.பிரகாஸ் தலைமையில், மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் கிருபாளினியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நீண்டகாலமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த நாவற்காடு தபால் அலுவலகத்திற்கு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபுவின் தீவிர முயற்சியினால் 21.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது.
இதனையடுத்து புதிய கட்டட நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல்லினை பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அதிதிகள் இணைந்து நாட்டி வைத்தனர்.
இப்புதிய கட்டடத்தை அமைப்பதற்கான காணியினை நாவற்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினரும் நாவற்காடு முதியோர் சங்கத்தினரும் இணைந்து இலவசமாக வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை மற்றும் கிரான் ஆகிய தபால் அலுவலகங்களும் தற்போது தனியார் கட்டடங்களிலேயே இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள், அக் கட்டடங்களுக்கும் புதிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை முன்வைத்தனர்.
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()









