ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவுக்கும் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்கவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு ஆசிய பசிபிக் பிராந்தியப் பணிப்பாளர் பீட்டர்ஸ் உஸ்டபஸ் தலைமை தாங்கியுள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் எரிசக்தி சேமிப்புத் தொழில்நுட்பங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் முதலில் தமது பாராட்டுகளைத் தெரிவித்ததாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எரிசக்தி உற்பத்தியில் பசுமை மாற்றத்தை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் முன்னெடுத்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் குறித்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதிநிதிகள் குழுவுக்கு விளக்கமளித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை தரப்பில் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு மற்றும் அமைச்சின் செயலாளர் டபிள்யூ. டபிள்யூ. எஸ். மங்கள ஆகியோரும் கலந்துகொண்டனர்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()






