இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் குறித்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல்!

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு (AI) இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் (பொறியியலாளர்) எரங்க வீரரத்னவுக்கும், இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் வெய் ஹுவாசியாங்க்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் 14.10.2026 அன்று இது குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் முக்கிய மூன்று விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் முன்னுரிமைகளைப் புரிந்து கொள்ளுதல், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஊடாக இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், மற்றும் தேசிய இறையாண்மை கொண்ட AI கணினியியல் மையமொன்றை நிறுவுவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியைப் பெறுதல் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே AI தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல் ஆகியவை முதன்மை விடயங்களாகக் கலந்தாலோசிக்கப்பட்டன.

சந்திப்பை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், தனது இராஜதந்திர சேவைக்கு முன்னர் பல்வேறு துறைகளில் பெற்ற அனுபவங்களை நினைவுகூர்ந்தார்.

இலங்கையில் தனது பதவிக்காலத்தில் AI பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் தனது முதன்மை நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சீன விஜயங்களின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் டிஜிட்டல் ஒத்துழைப்பு குறித்த வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை நிதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் GovTech தலைமைத்துவத்தின் ஆலோசனைகளுக்கு அமைவாக தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இதன்போது தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects