கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்படும் இந்தியக் கடற்படையின் மூன்று கப்பல்கள்!

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான தீர், சுஜாதா ஆகிய கப்பல்களும், இந்தியக் கரையோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘சாரதி’ கப்பலும் அண்மையில் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தன.

இவ்வாறு வருகை தந்த மூன்று கப்பல்களின் பணியாளர்கள் மற்றும் பயிற்சி அதிகாரிகள், இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு கூட்டுப் பயிற்சித் திட்டங்களிலும் பங்கேற்றனர்.

நீண்டதூரப் பயிற்சி நடவடிக்கைகளுக்கான திட்டத்தின் கீழ், இந்தியாவின் முதலாவது பயிற்சிக் கடற்படைக் குழு சீஷெல்ஸின் விக்டோரியா துறைமுகம் மற்றும் மாலைதீவின் மாலே துறைமுகம் ஆகியவற்றுக்கும் பயணம் மேற்கொண்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ், இலங்கை கடற்படையைச் சேர்ந்த ஐந்து கடற்படைப் பயிற்சி அதிகாரிகளுக்கும் இந்த சிறப்புப் பயிற்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நீண்டதூரப் பயிற்சித் திட்டத்தின் மற்றுமொரு மைல்கல்லாகக் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்களில், இலங்கை கடற்படை அதிகாரிகள் பயிற்சி நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையில் தொழில்சார் அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

மேலும், இரு நாட்டுக் கடற்படையினரும் இணைந்து நடத்திய இசைக்குழு நிகழ்ச்சி காலி முகத்திடலில் நடைபெற்றது.

இந்த நட்புறவுப் பயிற்சி விஜயத்தை நிறைவு செய்துகொண்டு, குறித்த மூன்று கப்பல்களும் இன்று கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects