2,819 தாதியர்களுக்கு நியமனங்கள் மற்றும் 76 பேருக்கு பதவியுயர்வுகள்!

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் உள்ள தாதியர் கல்லூரிகளில் 3 வருட உயர் டிப்ளோமா படிப்பை நிறைவு செய்த 2020ஆம் ஆண்டின் 2,819 பயிற்சி தாதியர்களுக்கு 3ஆம் தரச் தாதியர்களாக சுகாதார சேவையில் நியமனம் வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் 01.11.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.

2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞான மற்றும் கணிதப் பிரிவுகளில் தோற்றி, 2023ஆம் ஆண்டில் நாடளாவிய ரீதியிலுள்ள 16 தாதியர் கல்லூரிகளில் இணைந்து 3 வருட உயர் டிப்ளோமா படிப்பை நிறைவு செய்த 2,819 தாதியர்களுக்கு இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு நியமனம் பெறும் தாதியர்கள் நாடளாவிய ரீதியிலுள்ள மத்திய அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் இணைக்கப்படவுள்ளனர்.

இந்நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்விற்கு இணைவாக, வைத்திய சேவையில் ஈடுபட்டுள்ள முதலாம் தரத்தைச் சேர்ந்த 76 தாதியர்கள், விசேட தர தாதியர்களாகப் பதவியுயர்த்தப்பட்டு அதற்கான கடிதங்களும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ,

நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலை கட்டமைப்பில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மக்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவதற்காக வெற்றிடங்களுக்கு விரைவாக ஆட்சேர்பபு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

2017ஆம் ஆண்டிற்குப் பின்னர் தாதியர் சேவையிலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கான (2025-2035) சுகாதாரக் கொள்கை மற்றும் மூலோபாயத் திட்டங்களின்படி, விஞ்ஞான தரவுகளின் அடிப்படையில் தேவையான ஊழியர்கள் கணிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 2027-2029 ஆகிய மூன்று ஆண்டுகளில் 13,000 தாதியர்களைச் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் நிதி அமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அங்கீகாரத்துடன் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந் நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் அமைச்சின் மேலதிக செயலாளர்கள், பிரதிப் பணிப்பாளர்கள் நாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects