‘டித்வா’ அனர்த்தத்தினால் சேதமடைந்த இலங்கையின் 14 பாலங்களைப் புனரமைப்பதற்காக, சீன அரசாங்கத்தின் முழுமையான நன்கொடை உதவியுடன் முன்னெடுக்கப்படும் விசேட திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் 01.11.2026 அன்று கம்பஹா, பெம்முல்ல பாலத்திற்கு அருகில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது.
முதற்கட்டத்தின் கீழ் 9 பாலங்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் மேலும் 5 பாலங்களும் புனரமைக்கப்படவுள்ளன.
முதற்கட்டத் திட்டத்திற்காக ரூ. 3,933 மில்லியன் (79 மில்லியன் சீன யுவான்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு 18 மாதங்கள் காலம் திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாக்சியாங் (Wei Huaxiang) சீன அரசாங்கத்தின் சார்பில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
‘டித்வா’ அனர்த்தத்தினால் நாட்டின் வீதிக் கட்டமைப்பில் 400 இற்கும் மேற்பட்ட இடங்கள் சேதமடைந்துள்ளன. இவற்றை மீளமைத்து, மக்களின் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளை உறுதிப்படுத்துவது முதன்மையான பொறுப்பாகும்.
அனர்த்தம் ஏற்பட்ட தருணம் முதல் இலங்கைக்கு ஆதரவளித்து வரும் சீன அரசாங்கம், சீன மக்கள் மற்றும் உதவிகளை வழங்கிய அனைத்து நட்பு நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








