வகுப்பறைக் கல்விக்கு அப்பால் நாட்டின் வரலாறு, ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரச நிர்வாகச் செயல்முறை என்பன பற்றிய நடைமுறை புரிதலை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படும் ‘Vision’ கல்வி நிகழ்ச்சித் திட்டத்தில் கேகாலை பாலிகா வித்தியாலய மாணவிகள் 04.11.2026 அன்று பங்கேற்றனர்.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மக்கள் தொடர்புப் பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, ஜனாதிபதி ஊடக ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான சந்தன சூரியபண்டார, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் லெப்டினன் கேணல் நதீக தங்கொல்ல ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக, குறித்த மாணவிகளுக்கு ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை ஆகியவற்றை பார்வையிடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
இதன்போது, எதிர்காலத் தலைவர்களை உருவாக்குதல் மற்றும் தலைமைத்துவத்துக்குத் தேவையான அறிவு, திறன்கள், மனப்பாங்குகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் பிரசன்ன சந்தித் மாணவிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், கேகாலை பாலிகா வித்தியாலய அதிபர் எச்.ஏ.டி.டி.கே. ஜயரத்ன, ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()







