சர்வதேச ஆசிரியர் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 5 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. யுனெஸ்கோ சாசனத்தின்படியே 1966 ஆம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் உருவாக்கப்பட்டது. ஆயினும் இந்த ஆசிரியர் தினத்தின் அதிகாரப்பூர்வமான கொண்டாட்டம் அக்டோபர் 5, 1994 இல் தொடங்கப்பட்டது. உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து இலங்கையில் அக்டோபர் 5 ஆம் திகதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
எந்தவொரு மனிதனும் தனது வாழ்நாளில் அனைத்து வெற்றிகளையும் தன்வசப்படுத்தி உயர் நிலைக்கு செல்ல காரணமாக இருக்கும் ஆசிரியர்களுக்கு மதகு ஊடகம் சார்பாக இனிய ஆசிரியர் தின நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.