பங்குச்சந்தை அறிமுகமும் CSE Mobile App பயன்பாடு தொடர்பாக மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta


பங்குச்சந்தை அறிமுகமும் CSE Mobile App பயன்பாடு தொடர்பாக மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் செயலமர்வு 21.08.2025 அன்று கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட செயலாளர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அதன் பிரகாரம், கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையின் அதிகாரி எம்.ஜே.எம்.அலீமுடீன் தலைமையில், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் செயலமர்வினை மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, பங்கு பரிவர்த்தனை, பங்குச் சந்தை என்றால் என்ன? அங்கீகரிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனையினை எப்படி இணங்காண்பது, மூலதன இலாபம் என்றால் என்ன?, பங்கு இலாபம் என்றால் என்ன?, நிதி சார் கல்வி அறிவினை மேம்படுத்துவது தொடர்பாகவும், பாதுகாப்பான முறையில் எவ்வாறு பங்குச் சந்தை நடைமுறையினை கையாள்வது, இலங்கையில் ஏற்படும் பணவீக்கத்தினால் எற்படும் சாதக பாதக தன்மை, அங்கீகரிக்கப்படாத நிதி செயற்பாடுகளால் ஏற்படும் தீமைகள், சேமிப்பு மற்றும் முதலீடுகள், பாதுகாப்பு, செலவு, திரவத்தன்மை, இடர்நேர்க்கை, வெகுமதிகள், வரி மற்றும் வயது தொடர்பாகவும் விரிவாக இச் செயலமர்வில் விளக்கமளிக்கப்பட்டன.

செயலமர்வில் மாவட்ட செயலக (காணி) மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜனி முகுந்தன், மாவட்ட செயலக நிறைவேற்றுத் தர உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects