ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்துவோர் குறித்து WhatsApp ஊடாக முறையிடுமாறு பொலிஸார் கோரிக்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மற்றும் பாரிய வீதி விபத்துகளைக் கருத்திற்கொண்டு, ஆபத்தான முறையில் வாகனங்களைச் செலுத்துவோர் தொடர்பான காணொளி ஆதாரங்களை WhatsApp ஊடாக அனுப்புமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்காக 070-4755600 என்ற WhatsApp இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற செயற்பாடுகள் பாரிய வீதி விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் முக்கிய காரணங்களாக அமைவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் மற்றும் காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் ஏற்கனவே பல சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உரிய அனுமதியின்றி ஆபத்தான மாற்றங்கள் செய்யப்பட்ட வாகனங்கள் பயணிகளுக்கும் ஏனைய வீதிப் பயனாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற விபத்துகள் தொடர்பான விசாரணைகளில், விபத்துக்குள்ளான சில பேருந்துகள் செல்லுபடியாகும் வாகனத் தகுதிச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகளவில் கறுப்புப் புகையை வெளியிடும் வாகனங்கள் தொடர்பாக 070-3500525 என்ற WhatsApp இலக்கத்திற்கு வாகனப் பதிவு இலக்கம், திகதி, இடம் மற்றும் புகைப்படங்கள் அல்லது காணொளிகளுடன் முறைப்பாடுகளை அனுப்ப முடியும்.

முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள்:

ஆபத்தான வாகன ஓட்டம்: 070-4755600

அதிக கறுப்புப் புகை வெளியிடும் வாகனங்கள்: 070-3500525

பொலிஸ் அவசர சேவை: 119

கொழும்பு அவசர அழைப்புப் பிரிவு: 0112-433333

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு: 1955

நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான சோதனை நடவடிக்கைகள் தொடரும் என்றும், விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects