இன்று ஆரம்பமான 2027 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான 2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் 12.11.2026 அன்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அது தொடர்பான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (13.11.2026) முதல் ஆரம்பமாகியது.

இதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் நவம்பர் 20 ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு விவாதத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் இரண்டாம் வாசிப்பு தொடர்பான வாக்கெடுப்பு நவம்பர் 20 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 14 ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.

விவாதத்தின் முடிவில், 2027 வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு, அதாவது மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 14 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.

அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்ந்த, சனிக்கிழமைகள் உட்பட ஏனைய அனைத்து நாட்களிலும் முற்பகல் 9.30 மணிக்கு இந்த வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்காகப் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects