மேல் மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை சுகாதார அமைச்சுடன் இணைந்து ஆரம்பித்த அம்கோர் நிறுவனம்!

மட்டக்களப்பு மாவட்டத்தை தலைமையகமாக கொண்டு இயங்கும் தேசிய தன்னார்வ தொண்டு நிறுவனமான அம்கோர் நிறுவனத்துடன் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவானது இணைந்து மேல் மாகாணத்திற்கான டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வானது 27.10.2026 அன்று கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் சுவசிறிபாய நிலையத்தில் அமைச்சின் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவை) டாக்டர் W. K.விக்கிரமசிங்கே தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நியூசிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகர் டேவிட் பயின் (DAVID PINE) பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கர சமுதாய மருத்துவ நிபுணர் டாக்டர் பிறசிலா சமரவீர மற்றும் அம்கோர் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ப.முரளிதரன் நிதிப் பணிப்பாளர் துமின்த பெரேரா சிரேஸ்ட நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் யோ.சிவயோகராஜன் கொள்வனவு மற்றும் வழங்கல் உதவி முகாமையாளர் பிறிஸ்லி றோய் அத்துடன் கம்பஹா களுத்துறை மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் அம்கோர் நிறுவனம் தொடர்பான அறிமுகமும் கடந்த காலங்களில் சுகாதாரத்துறைக்கு வழங்கிய உதவிகள் மற்றும் தற்போது செயற்படுத்தப்படவுள்ள திட்டத்தின் நோக்கம் அதன் செயற்பாடுகள் பற்றிய விளக்கமளிக்கப்பட்டதுடன் கம்பஹா களுத்துறை மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை மேலும் வலுப்படுத்துவதற்காக 06 புகை விசிறும் கருவிகளும் 55 தனிநபர் பாதுகாப்பு பொருட்களின் தொகுதியும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் டாக்டர் கபில கன்னங்கரவிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இச்செயற்றிட்டத்திற்கான நிதியினை நியூஸ்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உயர்ஸ்தானிகராலயமும் UMCOR நிறுவனமும் வழங்குவதுடன் அம்கோர் நிறுவனமானது கடந்த 10 வருடங்களுக்கு மேலாக டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects