2026 நவம்பர் 17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2026 நவம்பர் 17ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது ஒரு “புயலாக” வலுவடைந்துள்ளதுடன், அதற்கு “Akvan” (அக்வான்) என்று பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இத் தொகுதி நேற்று நவம்பர் 16 ஆம் திகதி பிற்பகல் 11:30 மணிக்கு, திருகோணமலையிலிருந்து ஏறத்தாழ 640 கி.மீ தூரத்தில் 12.20 N இற்கும் கிழக்கு நெட்டாங்கு 85.70 E இற்கும் அருகில் மையம் கொண்டிருந்தது. இத் தொகுதி தொடர்ந்தும் வடக்கு – வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இன்று நவம்பர் 17 ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் மேற்கு – மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு “தீவிர சூறாவளிப் புயலாக” மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அதன் பின் அத் தொகுதி வடமேற்குத் திசையில் நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், நவம்பர் 19 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் ஒரு “மிகத் தீவிர பாரிய சூறாவளிப் புயலாக” மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேற்குத் திசையிலான தனது நகர்வைத் தொடர்ந்து கொண்டு, இத் தொகுதி ஆந்திரப் பிரதேச மற்றும் யனம் கடற்கரைகளை நெல்லூருக்கும் தூனிக்கும் இடையில் நவம்பர் 20 ஆம் திகதி காலை 11.30 மணியளவில் ஒரு “மிகத் தீவிர பாரிய சூறாவளிப் புயலாக” கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
மழை நிலைமை:
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்குத் திசையிலிருந்து அல்லது மேற்குத் திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று (மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை) வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
(வளிமண்டலவியல் திணைக்களம்)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇
![]()








